வியாழன், 4 டிசம்பர், 2025

குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா

உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா

மலையில் நின்று ஆட்சி புரியும்

உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே.

Kundrathuril sirikum murugaa

Koil noaki eerkum murugaa

Malaiyil nindru aatchi seiyum

Un kaatchi kanave kankodi vendumey

விபூதிகாப்பா சந்தனக்காப்பா

வரும் வழியெல்லாம் என் மனம் பறக்குது.

படியேறி வந்து பணிந்தேன் முருகா

பார்த்தபோதே கரைந்தேன் முருகா

அன்பான சண்முகனை அருகினில் கண்டத்தினால்

ஆனந்தத்திலே கண்ணீரும் துளிர்க்குது. (குன்றத்தூரில்..)

Vibhuthi kaapa sandhana kaapa

Varum vazhiyellam en manam parakudhu

Padiyeri vandhu panindhen murugaa

Paartha podhey karaindhen murugaa

Anbaana shanmuganai aruginil kandathinal

Aandhathiley kanner thulirkudhu (kundrathooril)

என்ன வேண்டும் கேட்டாய் முருகா

சொல்லவந்ததை மறந்தேன் முருகா

வீடு செல்லுமுன் அள்ளிக் கொடுப்பாய்

அன்னை போலவே அணைத்துக் கொள்வாய் (குன்றத்தூரில்..)

Enna Vendum kettai murugaa,

solla vandhathai marandhen murugaa

Veedu serummun alli koduthaii

Annai polavey anaithukolvaai

(Kundrathooril)

படி ஏற ஏற வாழ்வு ஏறும்

கந்தனருள் செல்வமும் சேரும்

கோடி-பேரை காக்கும்-முருகன் நம்மையும் நம் மக்களையும் கண்போல காக்கட்டும்  (குன்றத்தூரில்..)

Padi era era vazhvuu erum

Selvam serum kandhanarul koodum

Kodi perai kaakum murugan nammayum

Nam maaklayum kanpola kaakatum

(Kundrathooril)

கும்பிட்டால்.... போதும்ம்....

அரோகரா... குன்றத்தூர் குமரனுக்கு அரோகரா..

கந்த கடவுளை கும்பிட்டால் போதும்

கேட்காமலே எல்லாம் கைகூடும்

(குன்றத்தூரில்..)

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

குன்றத்தூர் குமரனுக்கு அரோகரா

Avanai ....Kumbitaal.... podhum ....

Arogara... Kundrathur Kumaranuku Aroghara

Kandha kadavulai Kumbitaal podhum

ketkaamaley ellam kai koodum

(Kundrathooril)

Vetrivel muruganuku arogara, kundrathur Kumaranuku Aroghara 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...