சனி, 18 ஜூலை, 2020

ஊரடங்கு என் குருவிப் பார்வையில் #LockdownTales


This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers; 
Share Your #LockdownTales 

ஊரடங்கில்தான் நம்மில் எத்தனை மாற்றங்கள்!

குழந்தைகள் ஏகலைவன் போல் "online classes" ல் அமர்ந்துவிட😅

சண்முகர் மயிலேரி உலகத்தை சுற்றியது போல் புல்லட்டு வண்டியில் சென்னையை சுற்றியவருக்கு இப்போது ஞானப்பழ கதையாக  "work from home "😎

எல்லோருக்கும் விதுரநீதி  பேச Twitter மற்றும் Youtube
 உக்கார்ந்த இடத்தில் சஞ்சயதிருஷ்டி  போல "LIVE NEWS" வேறு 😃

 ஆனால்,என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கோ இது திரிசங்கு 
சொர்கம். 😅

கண்ணன் திரௌபதிக்கு கொடுத்த சேலை போல துவைக்கவும் மடிக்கவும் துணி வந்து கொண்டே  இருக்க...  kitchen sink , அக்ஷய பாத்திரமாய் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. 😱

பத்தாகுறைக்கு" Social distancing"என்ற பெயரில் நமக்கு கூடமாட ஓத்தாசைக்கு இருந்த maid அக்காவும் வருவதில்லை...

இனி சோழ தேச வேளைக்கார படையோ பாண்டிநாட்டு ஆபத்துதவிகளோ வந்தால் தான் உண்டு.....😔
 
இந்த நிலையில் ,என்னுள்  Disney princess விழித்துக்கொண்டாள்

Princess: ஓருவேளை பாட்டி பொய் சொல்லி விட்டாளோ? 
இருக்காது. பாட்டி பொய் சொல்லவேமாட்டாள்.

இப்போதெல்லாம் ராஜகுமாரர்கள் பிறப்பதே இல்லையோ 😓
, நம்மை கொரோனாவிடமிருந்து காப்பாற்ற  இளவரசனுக்கு வழிதான் தெரியவில்லையோ
....
இல்லை பாவம்
இளவரசனுக்கு ஏறி வர குதிரை கிடைக்கவில்லை போலும்...😭😭😭

இப்போது தான் இந்த Disney princess, daddy's lil princess எல்லாம், வெளியே போடும் makeup போல காலத்தின் கோலம் , வெளி வேஷம .... ஆனால் உள்ளே....உள்ளே ஓடுவது உதிரமல்ல , பாரதியின் வரிகள்.  

பயந்ததும் அழுததும் போதும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டாள் ..
பாரதியின் வண்ணத்தை பூசிக்கொண்டாள்.புதுமைப் பெண்ணாய் மாறி நின்றாள். 

(வீரப்பெண்கள் ஒழிப்பாராம், சாத்திரங்கள் பல பல கற்பாராம் , சவுரியங்கள் பலபல செய்வாராம். )

Every girl is similar in having a Dad's little princess and a Bharathi's pudhumai pen within her. 

Every girl is unique,  because of their proportion of little princess+Pudhumai pen varies. 

It's simple 

சாதாரண இல்லத்தரசியாகவும் இளவரசியாகவும் இருக்கும்போது கனத்த இந்த ஊரடங்கும் , அதன் மன அழுத்தமும். பாரதியின் புதுமைப்பெண்ணான போது அமிழ்ந்துவிட்டது. அழிந்தேவிட்டது .

பாரதி போல அச்சமில்லை அச்சமில்லை பாடுவோம்.
அக்கினி குஞ்சின் முன் கொரோனா பிழைக்காது, ஊரடங்கும் கசக்காது. 

இதுவும் கடந்து போகும்.

 

13 கருத்துகள்:

  1. Hello. I cannot read Tamil but I translated the page to English. We know that translation hardly does justice to the emotion. It is great to see that you are keeping cheerful and strong in difficult times. It's not easy being at home and continue to do all these tasks. I apologize if I did not capture it correctly. Either way - I see that this is a new blog. Keep writing and keep growing as a writer.

    பதிலளிநீக்கு
  2. Dear Poorani,

    I just translated the page to English and I could so relate with the dilemma you were talking about for women working from home or working for home and family!
    More power to women like you, who work tirelessly and let everyone feel looked after!

    Very well narrated, this too shall pass :)

    Regards'
    Megha :)

    பதிலளிநீக்கு
  3. It'll be great if you can share English translation of this :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல தமிழ். ஆற்றொழுக்கு நடை. தெளிவான சிந்தனை. பலே பாண்டியா எனும் பாரதி பாணியில் பலே பூரணி!!

    பதிலளிநீக்கு
  5. நல்ல தமிழ். ஆற்றொழுக்கு நடை. தெளிவான சிந்தனை. பலே பாண்டியா எனும் பாரதி பாணியில் பலே பூரணி!!-T R

    பதிலளிநீக்கு
  6. தமிழுக்கும் அமுதென்று பேர்....என் தமிழச்சி க்கு அம்மூ என்று பேர்...

    பதிலளிநீக்கு
  7. நல்ல கருத்து...அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...