சனி, 18 ஜூலை, 2020

ஊரடங்கு என் குருவிப் பார்வையில் #LockdownTales


This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers; 
Share Your #LockdownTales 

ஊரடங்கில்தான் நம்மில் எத்தனை மாற்றங்கள்!

குழந்தைகள் ஏகலைவன் போல் "online classes" ல் அமர்ந்துவிட😅

சண்முகர் மயிலேரி உலகத்தை சுற்றியது போல் புல்லட்டு வண்டியில் சென்னையை சுற்றியவருக்கு இப்போது ஞானப்பழ கதையாக  "work from home "😎

எல்லோருக்கும் விதுரநீதி  பேச Twitter மற்றும் Youtube
 உக்கார்ந்த இடத்தில் சஞ்சயதிருஷ்டி  போல "LIVE NEWS" வேறு 😃

 ஆனால்,என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கோ இது திரிசங்கு 
சொர்கம். 😅

கண்ணன் திரௌபதிக்கு கொடுத்த சேலை போல துவைக்கவும் மடிக்கவும் துணி வந்து கொண்டே  இருக்க...  kitchen sink , அக்ஷய பாத்திரமாய் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. 😱

பத்தாகுறைக்கு" Social distancing"என்ற பெயரில் நமக்கு கூடமாட ஓத்தாசைக்கு இருந்த maid அக்காவும் வருவதில்லை...

இனி சோழ தேச வேளைக்கார படையோ பாண்டிநாட்டு ஆபத்துதவிகளோ வந்தால் தான் உண்டு.....😔
 
இந்த நிலையில் ,என்னுள்  Disney princess விழித்துக்கொண்டாள்

Princess: ஓருவேளை பாட்டி பொய் சொல்லி விட்டாளோ? 
இருக்காது. பாட்டி பொய் சொல்லவேமாட்டாள்.

இப்போதெல்லாம் ராஜகுமாரர்கள் பிறப்பதே இல்லையோ 😓
, நம்மை கொரோனாவிடமிருந்து காப்பாற்ற  இளவரசனுக்கு வழிதான் தெரியவில்லையோ
....
இல்லை பாவம்
இளவரசனுக்கு ஏறி வர குதிரை கிடைக்கவில்லை போலும்...😭😭😭

இப்போது தான் இந்த Disney princess, daddy's lil princess எல்லாம், வெளியே போடும் makeup போல காலத்தின் கோலம் , வெளி வேஷம .... ஆனால் உள்ளே....உள்ளே ஓடுவது உதிரமல்ல , பாரதியின் வரிகள்.  

பயந்ததும் அழுததும் போதும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டாள் ..
பாரதியின் வண்ணத்தை பூசிக்கொண்டாள்.புதுமைப் பெண்ணாய் மாறி நின்றாள். 

(வீரப்பெண்கள் ஒழிப்பாராம், சாத்திரங்கள் பல பல கற்பாராம் , சவுரியங்கள் பலபல செய்வாராம். )

Every girl is similar in having a Dad's little princess and a Bharathi's pudhumai pen within her. 

Every girl is unique,  because of their proportion of little princess+Pudhumai pen varies. 

It's simple 

சாதாரண இல்லத்தரசியாகவும் இளவரசியாகவும் இருக்கும்போது கனத்த இந்த ஊரடங்கும் , அதன் மன அழுத்தமும். பாரதியின் புதுமைப்பெண்ணான போது அமிழ்ந்துவிட்டது. அழிந்தேவிட்டது .

பாரதி போல அச்சமில்லை அச்சமில்லை பாடுவோம்.
அக்கினி குஞ்சின் முன் கொரோனா பிழைக்காது, ஊரடங்கும் கசக்காது. 

இதுவும் கடந்து போகும்.

 

வெள்ளி, 5 ஜூன், 2020

பாரதீ🔥( HIGHLY INFECTIOUS)

கொரோனா மட்டும் இல்லை...
பாரதி(தீ) தொட்டால் தொடரும் , உள்ளத்தில் பற்றிக் கொள்ளும் தீ.

அவரோட அக்கினிகுஞ்சு வார்த்தைகள், ஒரேயொரு உள்ளத்து பொந்தில் வைத்தால் போதும், குழந்தைகள் , நண்பர்கள் என்று சுற்றிலும் வெந்து தணிந்து ஒளிரும் வல்லமை பெற்றது.

காதலை சொல்லணுமா?கோபத்தை கொட்டணுமா? குழந்தையை கொஞ்சணுமா? எல்லாவற்றுக்கும் நான் பாரதி வரிகளையே எடுத்துக்கொள்கிறேன். 

அடுத்த தலைமுறைக்கு  விதைத்தே ஆகணும் பாரதி(தீ)🔥. நான் விதைத்துவிட்டேன், என் மகளுக்கு...
 ”பாரதி பாடியிருக்காருல்ல காலை படிப்பு , மாலை விளையாட்டு ” என்று  சொல்லியே பழக்குகிறேன். 

அடுத்த அறைக்கு செல்ல பயந்து தயங்கினால், ”அச்சமில்லை அச்சமில்லை ” பாடு பயமே இருக்காது என்பேன். சேர்ந்து பாடுவோம் பயமின்றி அழகாக சென்று வருவாள்.

இரவில் தூங்க வைக்க ”சின்னஞ்சிறு கிளியே”...

கார் பயணத்திலும் , மொட்டை மாடிக்கு போகும்போதும் ”காக்கைச் சிறகினிலே”...நம் தாய் தமிழை நம் பிள்ளை சொல்ல கேட்க ... அதுவும் பாரதி வரிகளை🥰 ஆஹா 😍சொர்க்கம்.....

காற்று, தண்ணீர், உணவு, பாரதியின் வரிகள்.... இன்பமாய்
உயிர் வாழ இவை போதாதா?! 


 

சனி, 25 ஏப்ரல், 2020

NO WORRIES

When I worried about ovulation , i missed it😣

When i worried about labour pain, ended up with Csection 😔

When i worried about hairfall , omg it increased😱

When i worried about kids , they became more sick and thin🙄

But when i stopped worrying 🤔everything turns normal.🤩

 I learned this way😅Hakuna Matata, no worries.💃💃💃

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பின் பற்றாக்குறை

----------------

இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான்  அழறாங்க . 
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....

 Spread love & smile❤😃



Rice Porridge( Kanji) recipe for babies & kids

1.Rice (puzhungal) 250g
2.Red rice /brown rice or matta rice 100
3.Broken wheat 100g
4.Pachapayaru or Siruparupu 50g
5.Udachakadalai 50g
6.Cashew 3
7.badam 3

Dry roast every above things separately n ground .... Seive and soft ground for 1year babies .. Coarse grind for toddlers.

Add enough milk or water n boil...  Make sure of no lumps...cook till you get that kanji texture.. . Add palmjagerry or salt for taste . Yummy kanji , sure kids will love... This is our moms recipe for us  n my kids 😍

Want more traditional healthy recipes? please comment... And please do share your recipes also. Thakyou friends.

பழமொழி my fav

Kamalahassan  dialogue from a famous film பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது...

நான் ஆராய்ந்து அனுபவித்த பழமொழி
" கெடுவான் கேடு நினைப்பான்"

 Vinasakaale vibhareedha budhi , கெட்ட எண்ணம் கேடு கால புத்தி என்று விதவிதமாக எப்படி சொன்னாலும்,   சுய பரிசோதனைக்கும் ஒழுக்கத்துக்கும் உதவும் வேத வாக்கியமாகவே இதை பார்க்கலாம்.

பயத்தை உண்டுபண்ணியாவது , "யாருக்கும் தீங்கிழைத்துவிடாதே, மனத்தாலும் எண்ணிடாதே" என்று சொல்லும் விதம்... Wow😍


உங்களை கவர்ந்த பழமொழிகளை  commentsல் பகிரவும். நன்றி.

ஒரு பானை சோறு



எனது மாமியாரை பற்றி யாரும் கேட்கும் பொழுது நான் சொலும் கதை... உண்மைக் கதை...

2015 ,  ஒரு காலை வேளை,  அடுக்களையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்... வெளியே ஏதோ சத்தம்... சண்டையா? யாருக்கு ?யாருடன்?  ஒரு curiosity உடன் நான் வெளியே ஓட  , வெளியே இருந்த என் மாமியார் வேகமாய் உள்ளே வந்தார்...

ஆர்வம் குறையாமல் என்னம்மா சத்தம் என்று கேட்க , " எதிர் வீட்டம்மாவை அவள் கணவன் திட்டுகிறார், நான்  இருப்பதை பார்த்தால் அவர்களுக்கு சங்கடமாகிவிடும் என்று உள்ளே வந்து விட்டேன் " என்றார்.

எனக்கு மண்டையில் குட்டியது போல் இருந்தது...

அவர் குணத்திற்கு இது ஒரு சான்று... தலைப்பை மறுபடி படிக்கவும். நன்றி.

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...