வியாழன், 22 மே, 2025

இந்த சிப்பியின் முத்து

22/5/2025

இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது

வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் தெரிந்திருக்கவில்லை.

நிறைகுடம் தளும்பாதாம், நிறைமாதம் எதிர்பார்ப்பும் பதட்டமுமாய் உள்ளம் தளும்பியே கழிந்தது.

குளித்து சாப்பிட உட்கார்ந்த போது வயிற்றிலும் இடுப்பிலும் லேசான வலி.

சும்மாவே பதறுவோம், வலிச்சா விடுவோமா....  

கணவருக்கு, ஹாஸ்பிடலுக்கு, தாத்தா பாட்டிக்கு எல்லாருக்கும் தொலைபேசியில் அழைத்து, என் பயத்தை பங்கு போட்டேன்.

ஆட்டோ அண்ணாவிற்கும் அவசர அழைப்பு....

கொஞ்சமா சாப்பிட்டுரு, அப்புறம் எதுவும் சாப்பிட விடமாட்டாங்கடீ 

அம்மா ரசம் சாதம் ஊட்ட, எனக்கு தான் இறங்கவில்லை... இன்னும் எவ்ளோ வலிக்குமோ எவ்ளோ நேரம் வலிக்குமோ... அவனவன் பிரச்சனை அவனவனுக்கு 😅

கல்யாண வீடு தோற்கும் அளவு வரவேற்பு ஹாஸ்பிடலில்.  CSI ஹாஸ்பிடல், திருவள்ளூர், சேவை மனப்பான்மை இன்னும் இருக்கும் ஒரு மருத்துவமனை.

என் இதயத்துடிப்பே வெளியில் echo அடிக்குதோ ?!.... 

பாப்பாவின் இதயத்துடிப்பை monitor செய்து கொண்டிருந்தார்கள்...

இதை முதல் முதல் கேட்ட ஞாபகம்...அறையின் உள்ளே ரயில் வண்டியின் தண்டவாள சத்தம், நீருக்குள் இருந்து தப்பித்து மேலே வரும் குமிழி போல குபுக் குபுக் என்று.....

எந்த complicationsம் இல்லை, நார்மல் டெலிவரி ட்ரை பண்ணுவோம் என்றார் டாக்டர்.  நடக்க சொன்னார்கள்....

பெரிய வராண்டா, எத்தனை வட்டம் நடந்தேன் என்று எண்ணவெல்லாம் எண்ணம் இல்லை. 

இளநீர், சாத்துக்குடி ஜூஸ்.... நடு நடுவே  cervix dilation பரிசோதனை.... அந்த நேரம் மட்டும் என் கண்களுக்கு டாக்டர் பேய் போல தெரிந்தார் 🫣

பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை மதுரையில் இருந்து கிளம்பியாச்சா, எங்கே வரீங்க என்று கணவரிடம் குறுக்கு விசாரணை வேற.

என் வீட்டு ஆட்களே பத்து பேர்! என்ன இவ்ளோ கூட்டம் Nurse சிரித்துக்கொண்டே கேட்டார். ❤️

5pm: காலைல பத்து மணிக்கு நடக்க ஆரம்பிச்சது.... இன்னும் dilation பத்தலையா?!!! 

இவர எங்க இன்னும் காணோம் 😔அப்போது தான் அழ ஆரம்பித்தேன்.

8pm : முடியல சாமி, ஆபரேஷன் பண்ணிடுங்க என்று கையெழுத்து போட்டுவிட்டேன்.

10 pm: Anesthesia குடுக்க உள்ளே அழைத்து போக, இவர் குரல் வெளியே கேட்டது... 

அந்த மன நிறைவிலோ, வலி நின்ற அசதியிலோ, AC காற்றிலோ தெரியவில்லை தூங்கிப்போனேன்.

ஊசி poda எழுப்பினார்கள்... இந்த வயிர வெச்சுகிட்டு எப்படி குனிய... டாக்டர் டீம் ஜெபம் செய்தார்கள், process started and prince/princess will arrive soon.

குவா குவா என்றெல்லாம் சினிமா போல இல்லை, வீல் என்று மூச்சே விடாமல் நீளமாய் ஒரு அழுகை.... Sila நிமிடங்களில் வெள்ள வெள்ளேர் முகம், ரோஜா சிவப்பில் வாய்... ஒரு குட்டி பூ என் முகத்தின் பக்கத்தில்.... 

Girl baby என்றார் டாக்டர். என் பாப்பாவா, அவள் அழகில் உருகித்தான் போனேன்.

சில்லென்ற முகத்தில் முத்தமிட்டு சொன்னேன் Happy birthday papa,  அறையில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். 

எனக்கும் பாப்பாக்கும் குளிருது... மறுபடியும் துடைத்து incubator il வைக்க  வெளியே கொண்டு போனப்போது, அவரிடம் குழந்தையை குடுங்க என்றேன்.

பிறகு நடந்த எதுவும் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. 

கவிஞர் தாமரை ன் வரிகள் எவ்ளோ பொருத்தம் என் போன்ற அம்மாக்களுக்கு:  பல நாள் கனவே 😍 ஏக்கங்கள் தீர்த்தாயே ❤️என்னையே பிழைந்து உனை நான் எடுத்தேன், நான் தான் நீ வேறில்லை....❤️


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

இந்த சிப்பியின் முத்து

22/5/2025 இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் ...