This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers;
Share Your #LockdownTales
ஊரடங்கில்தான் நம்மில் எத்தனை மாற்றங்கள்!
குழந்தைகள் ஏகலைவன் போல் "online classes" ல் அமர்ந்துவிட😅
சண்முகர் மயிலேரி உலகத்தை சுற்றியது போல் புல்லட்டு வண்டியில் சென்னையை சுற்றியவருக்கு இப்போது ஞானப்பழ கதையாக "work from home "😎
எல்லோருக்கும் விதுரநீதி பேச Twitter மற்றும் Youtube
உக்கார்ந்த இடத்தில் சஞ்சயதிருஷ்டி போல "LIVE NEWS" வேறு 😃
ஆனால்,என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கோ இது திரிசங்கு
சொர்கம். 😅
கண்ணன் திரௌபதிக்கு கொடுத்த சேலை போல துவைக்கவும் மடிக்கவும் துணி வந்து கொண்டே இருக்க... kitchen sink , அக்ஷய பாத்திரமாய் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. 😱
பத்தாகுறைக்கு" Social distancing"என்ற பெயரில் நமக்கு கூடமாட ஓத்தாசைக்கு இருந்த maid அக்காவும் வருவதில்லை...
இனி சோழ தேச வேளைக்கார படையோ பாண்டிநாட்டு ஆபத்துதவிகளோ வந்தால் தான் உண்டு.....😔
இந்த நிலையில் ,என்னுள் Disney princess விழித்துக்கொண்டாள்
Princess: ஓருவேளை பாட்டி பொய் சொல்லி விட்டாளோ?
இருக்காது. பாட்டி பொய் சொல்லவேமாட்டாள்.
இப்போதெல்லாம் ராஜகுமாரர்கள் பிறப்பதே இல்லையோ 😓
, நம்மை கொரோனாவிடமிருந்து காப்பாற்ற இளவரசனுக்கு வழிதான் தெரியவில்லையோ
....
இல்லை பாவம்
இளவரசனுக்கு ஏறி வர குதிரை கிடைக்கவில்லை போலும்...😭😭😭
இப்போது தான் இந்த Disney princess, daddy's lil princess எல்லாம், வெளியே போடும் makeup போல காலத்தின் கோலம் , வெளி வேஷம .... ஆனால் உள்ளே....உள்ளே ஓடுவது உதிரமல்ல , பாரதியின் வரிகள்.
பயந்ததும் அழுததும் போதும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டாள் ..
பாரதியின் வண்ணத்தை பூசிக்கொண்டாள்.புதுமைப் பெண்ணாய் மாறி நின்றாள்.
(வீரப்பெண்கள் ஒழிப்பாராம், சாத்திரங்கள் பல பல கற்பாராம் , சவுரியங்கள் பலபல செய்வாராம். )
Every girl is similar in having a Dad's little princess and a Bharathi's pudhumai pen within her.
Every girl is unique, because of their proportion of little princess+Pudhumai pen varies.
It's simple
சாதாரண இல்லத்தரசியாகவும் இளவரசியாகவும் இருக்கும்போது கனத்த இந்த ஊரடங்கும் , அதன் மன அழுத்தமும். பாரதியின் புதுமைப்பெண்ணான போது அமிழ்ந்துவிட்டது. அழிந்தேவிட்டது .
பாரதி போல அச்சமில்லை அச்சமில்லை பாடுவோம்.
அக்கினி குஞ்சின் முன் கொரோனா பிழைக்காது, ஊரடங்கும் கசக்காது.
இதுவும் கடந்து போகும்.