வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

 May15 2021, Chennai.

கட்டிலுக்கும் கால் முளைக்கும்👣
படுத்துறங்கும் பாய் கூட பறவை ஆகும் 🕊️
ஆனால் உயரப் பறந்ததென்னவோ 💭🦋
நான் தான்
தாத்தா பாட்டி கதைகள் சொன்ன  இரவுகளில்...🌝🌜⭐
🌛

கதைகள் சொல்லும் தாத்தா பாட்டி கிடைத்த குழந்தைகள் எல்லோருமே பாக்கியசாலிகள், நானும் அந்த வரம் பெற்றவள் 😇

என் இரண்டு தாத்தாக்கள் தான் என் இனிய கதை சொல்லிகள். 
முதலில் என் அப்பாவின் அப்பா ,  அவர் retired headmaster... கதை சொல்லுங்க தாத்தா னு கேட்க வாயெடுக்கும் முன் தன்னுடைய பாட்டன் பூட்டனுடைய கதைகளை சொல்லுவார். அங்காளி பங்காளி அத்தனை பேரையும் அவர்களது ஊரையும் சொல்லி கொடுப்பார்.  எங்கே என்னுடைய தாத்தா பேரை சொல்லு பார்போம், என் ஒன்று விட்ட தம்பிகள் எத்தனை பேர், யார் யார் ? என் மூளைக்குள் கேள்விக்கணை தொடுப்பார்.  தனக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் குறிப்பிடுவார். இப்படி வருடம் முழுக்க அவருடன் உற்சாகமாய் கழியும்...

பள்ளி விடுமுறையில் அடிக்கும் எனக்கு real jackpot ,  அம்மாவின் அழகான கிராமம் நேமம் ... தாத்தா பாட்டி இருவருமே சளைக்காமல் கதை சொல்வார்கள்... இரவில் மட்டுமில்லை ... சாப்பாடு ஊட்டும் போது , மதிய உணவிற்கு பின்  என பட்டியல் நீளும், கூடவே என் மகிழ்ச்சியும்.

உம்ம்  கொட்டிக்கொண்டே நான் தூங்கிய நாட்களும் உண்டு. என் தம்பி தங்கைகளுக்கோ புதிய புதிய கதைகள் வேண்டும்.
ஆனால் எனக்கென்னவோ கேட்ட கதைகளையே திரும்ப கேட்பதில் ஒரு சந்தோஷம். 
பழசு புதுசு கணக்கே கிடையாது கதைகள் விஷயத்தில். கதை சொல்லும் விதம் தான் முக்கியம். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா பாட்டி இழுக்கும் ராகத்திற்கேற்ப ம்ம்ம்ம் என்போம்.

சில வருடங்களில், நீ தான் வளர்ந்துட்டியே , புத்தகம்லாம் படிக்க கத்துகிட்டியே  ...இனி நீ தான் எங்களுக்கு கதை சொல்லனும் என்றனர். "சே ...ஏன்டா வளர்ந்தோம்"னு இருந்தது.

புத்தக வாசிப்பை பற்றி "தாத்தா வீட்டுத் திண்ணையில் எண்ணிலடங்கா புத்தகங்கள்" னு வேறு கதையில் சொல்கிறேன்.

என்னை பொறுத்தவரை குழந்தை வளர்ப்பில்  தாய்பாலுக்கு நிகரானது  தாலாட்டு. சத்துணவு போன்றது கதைகள். சோற்று
கவளத்துக்குள் காய் மறைத்துவைத்து கொடுப்பதுபோல் கதைகளுக்குள்  moral 😁

கதைகள் மூலம் வாழ்வை புரியவைத்து , நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து , மகிழ்ச்சியாக வாழவும் சொல்லிக்கொடுத்த அம்மா அப்பா,  பாட்டி தாத்தாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏




2 கருத்துகள்:

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...