வெள்ளி, 5 ஜூன், 2020

பாரதீ🔥( HIGHLY INFECTIOUS)

கொரோனா மட்டும் இல்லை...
பாரதி(தீ) தொட்டால் தொடரும் , உள்ளத்தில் பற்றிக் கொள்ளும் தீ.

அவரோட அக்கினிகுஞ்சு வார்த்தைகள், ஒரேயொரு உள்ளத்து பொந்தில் வைத்தால் போதும், குழந்தைகள் , நண்பர்கள் என்று சுற்றிலும் வெந்து தணிந்து ஒளிரும் வல்லமை பெற்றது.

காதலை சொல்லணுமா?கோபத்தை கொட்டணுமா? குழந்தையை கொஞ்சணுமா? எல்லாவற்றுக்கும் நான் பாரதி வரிகளையே எடுத்துக்கொள்கிறேன். 

அடுத்த தலைமுறைக்கு  விதைத்தே ஆகணும் பாரதி(தீ)🔥. நான் விதைத்துவிட்டேன், என் மகளுக்கு...
 ”பாரதி பாடியிருக்காருல்ல காலை படிப்பு , மாலை விளையாட்டு ” என்று  சொல்லியே பழக்குகிறேன். 

அடுத்த அறைக்கு செல்ல பயந்து தயங்கினால், ”அச்சமில்லை அச்சமில்லை ” பாடு பயமே இருக்காது என்பேன். சேர்ந்து பாடுவோம் பயமின்றி அழகாக சென்று வருவாள்.

இரவில் தூங்க வைக்க ”சின்னஞ்சிறு கிளியே”...

கார் பயணத்திலும் , மொட்டை மாடிக்கு போகும்போதும் ”காக்கைச் சிறகினிலே”...நம் தாய் தமிழை நம் பிள்ளை சொல்ல கேட்க ... அதுவும் பாரதி வரிகளை🥰 ஆஹா 😍சொர்க்கம்.....

காற்று, தண்ணீர், உணவு, பாரதியின் வரிகள்.... இன்பமாய்
உயிர் வாழ இவை போதாதா?! 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...