வியாழன், 12 ஆகஸ்ட், 2021

தாலாட்டு 🤰🤱👶😴😇

ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ (யார் இவரோ)
நீ ஆளப்பிறந்தவரோ
நீ அரசாளவந்தவரோ

நா பெத்தெடுத்த ரத்தினமே
ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

மாமன் அடித்தானோ
மல்லிப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூத் தண்டாலே
சித்தி அடித்தளோ
செண்பகப்பூச் செண்டாலே
பாட்டி அடித்தாரோ
பால் வார்க்கும் சங்காலே

ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

கண்ணாண கண்ணே நீ
கண்ணுறங்கு கண்ணனுக்கு
ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ

அம்மாவும்  பாட்டியும் எனக்கு பாட, இப்போது நான் என் குழந்தைகளுக்கு பாடுகிறேன்😍 தாலாட்டு கேட்கும் குழந்தைகள் சீக்கிரமாக பேசுகிறார்கள்.
என் மகள் மற்றும் மகனுக்கு முறையே 6 & 4 வயதாகிறது. வளர்ந்த குழந்தை கூட இந்த பாடல் கேட்கும் பொழுது தூங்கும் நேரம் என புரிந்து கொண்டு அமைதியாக படுக்க பழகிவிடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவும் பிள்ளை பினைப்பு தாலாட்டின் மூலம் இறுகுகிறது. இது என் இனிய அனுபவம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...