#சண்முகம் பாட்டி
பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.
வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பேர பிள்ளைகளை கவனித்து கொண்டார் பாட்டி.
பாட்டி வளர்த்த பிள்ளைகள் ஆயிற்றே பாசத்துக்கு பஞ்சமேயில்லை.
பாட்டியின் செல்லப் பேரனை மணந்து கொண்டதால் செல்ல பேத்தியாக மாறிப் போனேன் நான்.
மதியம் சமைக்க வேண்டாம் என்பார், ரசம் வைத்தால் இதுவே போதும் என்பார், சாதாரண கேரட் பொரியலை ஆஹா என்பார்.
சாயங்காலம் நேரம் பசிக்குது வெளியில் போலாமா என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டால், ஆசையாய் ஒரு 500 ரூபாய் தாள் கொடுத்து அவளுக்கு ஏதாவது வாங்கி கொடு என்பார் 😍
எங்கள் திருமணம் கழித்து ஒரு 5 மாதங்கள் மட்டுமே பாட்டி எங்களுடன் இருந்தார்.
பழக கிடைத்த சில காலத்தில் பல கதைகளும் நிறைய பாசத்தையும் அள்ளி வழங்கினார் பாட்டி.
I strongly believe she is our guardian angel. she blessed us with two wonderful kids and with her blessings we all are living happily. 🙏