வியாழன், 22 மே, 2025

22/5/2025

இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது

வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் தெரிந்திருக்கவில்லை.

நிறைகுடம் தளும்பாதாம், நிறைமாதம் எதிர்பார்ப்பும் பதட்டமுமாய் உள்ளம் தளும்பியே கழிந்தது.

குளித்து சாப்பிட உட்கார்ந்த போது வயிற்றிலும் இடுப்பிலும் லேசான வலி.

சும்மாவே பதறுவோம், வலிச்சா விடுவோமா....  

கணவருக்கு, ஹாஸ்பிடலுக்கு, தாத்தா பாட்டிக்கு எல்லாருக்கும் தொலைபேசியில் அழைத்து, என் பயத்தை பங்கு போட்டேன்.

ஆட்டோ அண்ணாவிற்கும் அவசர அழைப்பு....

கொஞ்சமா சாப்பிட்டுரு, அப்புறம் எதுவும் சாப்பிட விடமாட்டாங்கடீ 

அம்மா ரசம் சாதம் ஊட்ட, எனக்கு தான் இறங்கவில்லை... இன்னும் எவ்ளோ வலிக்குமோ எவ்ளோ நேரம் வலிக்குமோ... அவனவன் பிரச்சனை அவனவனுக்கு 😅

கல்யாண வீடு தோற்கும் அளவு வரவேற்பு ஹாஸ்பிடலில்.  CSI ஹாஸ்பிடல், திருவள்ளூர், சேவை மனப்பான்மை இன்னும் இருக்கும் ஒரு மருத்துவமனை.

என் இதயத்துடிப்பே வெளியில் echo அடிக்குதோ ?!.... 

பாப்பாவின் இதயத்துடிப்பை monitor செய்து கொண்டிருந்தார்கள்...

இதை முதல் முதல் கேட்ட ஞாபகம்...அறையின் உள்ளே ரயில் வண்டியின் தண்டவாள சத்தம், நீருக்குள் இருந்து தப்பித்து மேலே வரும் குமிழி போல குபுக் குபுக் என்று.....

எந்த complicationsம் இல்லை, நார்மல் டெலிவரி ட்ரை பண்ணுவோம் என்றார் டாக்டர்.  நடக்க சொன்னார்கள்....

பெரிய வராண்டா, எத்தனை வட்டம் நடந்தேன் என்று எண்ணவெல்லாம் எண்ணம் இல்லை. 

இளநீர், சாத்துக்குடி ஜூஸ்.... நடு நடுவே  cervix dilation பரிசோதனை.... அந்த நேரம் மட்டும் என் கண்களுக்கு டாக்டர் பேய் போல தெரிந்தார் 🫣

பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை மதுரையில் இருந்து கிளம்பியாச்சா, எங்கே வரீங்க என்று கணவரிடம் குறுக்கு விசாரணை வேற.

என் வீட்டு ஆட்களே பத்து பேர்! என்ன இவ்ளோ கூட்டம் Nurse சிரித்துக்கொண்டே கேட்டார். ❤️

5pm: காலைல பத்து மணிக்கு நடக்க ஆரம்பிச்சது.... இன்னும் dilation பத்தலையா?!!! 

இவர எங்க இன்னும் காணோம் 😔அப்போது தான் அழ ஆரம்பித்தேன்.

8pm : முடியல சாமி, ஆபரேஷன் பண்ணிடுங்க என்று கையெழுத்து போட்டுவிட்டேன்.

10 pm: Anesthesia குடுக்க உள்ளே அழைத்து போக, இவர் குரல் வெளியே கேட்டது... 

அந்த மன நிறைவிலோ, வலி நின்ற அசதியிலோ, AC காற்றிலோ தெரியவில்லை தூங்கிப்போனேன்.

ஊசி poda எழுப்பினார்கள்... இந்த வயிர வெச்சுகிட்டு எப்படி குனிய... டாக்டர் டீம் ஜெபம் செய்தார்கள், process started and prince/princess will arrive soon.

குவா குவா என்றெல்லாம் சினிமா போல இல்லை, வீல் என்று மூச்சே விடாமல் நீளமாய் ஒரு அழுகை.... Sila நிமிடங்களில் வெள்ள வெள்ளேர் முகம், ரோஜா சிவப்பில் வாய்... ஒரு குட்டி பூ என் முகத்தின் பக்கத்தில்.... 

Girl baby என்றார் டாக்டர். என் பாப்பாவா, அவள் அழகில் உருகித்தான் போனேன்.

சில்லென்ற முகத்தில் முத்தமிட்டு சொன்னேன் Happy birthday papa,  அறையில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். 

எனக்கும் பாப்பாக்கும் குளிருது... மறுபடியும் துடைத்து incubator il வைக்க  வெளியே கொண்டு போனப்போது, அவரிடம் குழந்தையை குடுங்க என்றேன்.

பிறகு நடந்த எதுவும் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. 









செவ்வாய், 13 மே, 2025

Sunday சண்டை

நான் ஒரு IT HR,  வேலை முடித்து  வீடு திரும்பினேன், 


உள்ளே நுழைந்ததும் நுழையதாதுமாக கண்கள் தேடுவது பிள்ளைகளையும், கணவரையும்.


நான் பெற்ற மக்கள் செல்வங்களை கொஞ்சி முடித்து, இவரை பார்த்து சிரித்துக்கொண்டே மூன்று நாட்கள் விடுமுறை என்றேன் 😘


இவரிடமும், பிள்ளைகளிடமும் நேரம் செலவிடலாமே என்று நினைத்துக்கொண்ட மகிழ்ச்சியாய் நான்....


ஒதுங்க வைக்க வீடும், துவைக்க துணிகளும் , ஓய்வெடுக்க உடலும் கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் 


3 நாளா , அதுதான் என் பயமே என்றார்🫣


ஏன் என்னாச்சு, புரியாமல் 😡 கோபமாய் நான்


லீவ் விட்டா சண்டை தானே வரும்! 🥺 என்றார் பெரிதாய் அலட்டிகொள்ளாமல்


My mind voice: (நாம என்ன புருஷன் கூட அர்த்தமில்லாமல் சண்டை செய்யும் சாதாரண பெண்ணா, அறிவு மிக்க புதுமை பெண்ணாயிற்றே)

இந்த பிம்பத்தை மாத்துறோம்... இன்னிக்கே மாத்துறோம்....


விட்டத்தை பார்த்து விட்டேத்தியாய் பேசியவரை நான் விருப்பமுடன் பார்த்து  சொன்னேன் ---  " ம்ம்ஹ்ம்ம் இந்த லீவ் நாம எந்த சண்டையும் போடவே கூடாது, let's challenge ourselves உள்ளங்கையை காட்டியப்படி கேட்டேன், Love and love only ஓகேயா... "


நாம சண்டை போடாமட்டோம் தான்....நீ

தான் சண்டை ஆரம்பிப்ப , அப்புறம் நான் SORRY கேப்பேன்... இதுதானே நடக்குது....

ஒரு idea, பேசாம நீயே உன்ன challenge பண்ணிக்கோ என்றார்


இந்த பிளாட் ட்விஸ்ட் ல் அதிர்ந்தே போனேன்... என்கூட சேர்ந்து நல்லா பேச கத்துக்கிட்டார்.... உள்ளுக்குள் திட்டினேன்.

சரி நம் அகராதி பிடித்த அகராதியில் sorry யை சேர்த்துக்கொள்வோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்


 Sorry, please forgive me, Thank you, I love you... எல்லாம் சேர்த்தாகி விட்டது....

வாழ்க்கை இனிமையை சேர்த்துக்கொண்டது😍🤗


கொஞ்சம் பொறுமையா பேசினா தெரியுது இவர் நல்லவர் தான் போல !!! 

 

அதுக்கு மொதல்ல அவர பேச விடணும் ல!?!

இது புரிய கொஞ்சமே கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு.

P. S திருமணம் ஆகி வெற்றிகரமான 11 வருடங்கள்..... 

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

நினைவலைகளில் பாட்டி


 #சண்முகம் பாட்டி 

பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன். 

வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்து கொண்டார் பாட்டி. 

பாட்டி வளர்த்த பிள்ளைகள், பாசத்துக்கு பஞ்சமேயில்லை.

 செல்லப் பேரனை மணந்து கொண்டதால் செல்ல பேத்தியாக மாறிப் போனேன். 

மதியம் சமைக்க வேண்டாம் என்பார், ரசம் வைத்தால் இதுவே போதும் என்பார், சாதாரண கேரட் பொரியலை ஆஹா என்பார். 

திருமணம் கழித்து 5 மாதங்கள் மட்டுமே பாட்டி எங்களுடன் இருந்தார். பழக கிடைத்த சில காலத்தில் பல கதைகளும் நிறைய பாசத்தையும் அள்ளி வழங்கினார் பாட்டி.

I strongly believe she is our guardian angel. she blessed us with two wonderful kids and with her blessings we all are living happily. 🙏

பாட்டி வைத்தியம் - A must try magical recipe for your menstural cramps.

இது எனது கணவரின் பாட்டி, எனக்கு திருமணமான புதிதில் செய்து கொடுத்த மருந்து. 

சாப்பிட்ட உடனே வலி பறந்துவிடும், ஒரு கதகதப்பாக  இருக்கும். 


சுக்கு  - 1 துண்டு 
கருப்பட்டி - அரை வட்டு 

சுக்கை தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுக்கு கருப்பட்டி இரண்டையும் Mixie ல் ஒன்றாக பொடித்து கொள்ளலாம். 

சுக்கு கருப்பட்டி இரண்டையும் ஒன்றாக பிசைந்து உருண்டை வடிவில் உருட்டி தருவார் பாட்டி. 

செய்து பாருங்களேன் !!! 

22/5/2025 இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் ...