வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஒரு பானை சோறு



எனது மாமியாரை பற்றி யாரும் கேட்கும் பொழுது நான் சொலும் கதை... உண்மைக் கதை...

2015 ,  ஒரு காலை வேளை,  அடுக்களையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்... வெளியே ஏதோ சத்தம்... சண்டையா? யாருக்கு ?யாருடன்?  ஒரு curiosity உடன் நான் வெளியே ஓட  , வெளியே இருந்த என் மாமியார் வேகமாய் உள்ளே வந்தார்...

ஆர்வம் குறையாமல் என்னம்மா சத்தம் என்று கேட்க , " எதிர் வீட்டம்மாவை அவள் கணவன் திட்டுகிறார், நான்  இருப்பதை பார்த்தால் அவர்களுக்கு சங்கடமாகிவிடும் என்று உள்ளே வந்து விட்டேன் " என்றார்.

எனக்கு மண்டையில் குட்டியது போல் இருந்தது...

அவர் குணத்திற்கு இது ஒரு சான்று... தலைப்பை மறுபடி படிக்கவும். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...