Busy mom of cute two

வியாழன், 10 மார்ச், 2022

Pebbles

1. அம்மாவின் உயிரை பொசுக்கும் குழந்தையின் உடற் சூடு, #பிள்ளைக்கு காய்ச்சல். 

2.     பார்க்க அழகாக இருக்கும், ஆனால், இயற்கையின் இயல்பில் இருந்து மாறான எல்லாமே சுதந்திரத்தை பறிக்கும் சிறை தான். 

லவ் பேர்ட்ஸ் கூண்டும், மீன் தொட்டி மட்டுமல்ல..... 

போன்சாய் தொட்டியும், குழந்தைக்கு   playschool  , மனிதனுக்கு   apartment  

பார்க்க அழகாக தான் இருக்கும், வாழ்க்கைக்கு அல்ல. 



நேரம் மார்ச் 10, 2022 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

கி.ரா என்றொரு அதிசயம்

  கி.ரா என்றொரு அதிசயம்😇


நைநா என்று அன்புடன் அழைக்கின்றனர்
எந்த அப்பாவும் சொன்னதில்லை , பொருள் சேர்க்காதே...சேர்த்து வைக்கும் எறும்பும் தேனியும் பறிகொடுக்கும் என்று ... அதிசய அப்பா நீங்கள்.

தாத்தா என்று கூப்பிட்டு நேசிக்கும் பேரன்பேத்திக்கு எந்த தாத்தாவும் சொல்லப் போவதுமில்லை
பறவைகள் என்ன திருமணமா செய்துகொள்கிறது? பறவையை போல் வாழ் என்று....அதிசய தாத்தா நீங்கள்.

பேசக்கூடாததை பேசி வழக்குகள் வாங்குவோர் மத்தியில் அச்சிலேற்ற முடியாததை கைப்பிரதியாய் எழுதிய அதிசய அண்டரெண்டபட்சி நீங்கள் .

7வது படித்த வேறெவராவது பேராசிரியர் ஆக முடியுமா?!?! அறிவின் அதிசயம் நீங்கள்.

விடைத்தாள் வாங்கும்முன் அவசர அவசரமாக எழுதும் மாணவனைபோல் ...99 வயதிலும் எழுதிக்குவித்த நூறாண்டு அதிசயம் நீங்கள்.....

ஆம் இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள்.

கரிசல் பூமியின் அண்டரெண்டப்பட்சி தன் மிச்ச கதைகளை சொல்லிய பின் மாயமானாய் மறைந்த தினம் மே17. We miss you 😭🙏
MAY 18
Instagram
Log In
நேரம் அக்டோபர் 01, 2021 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

 May15 2021, Chennai.

கட்டிலுக்கும் கால் முளைக்கும்👣
படுத்துறங்கும் பாய் கூட பறவை ஆகும் 🕊️
ஆனால் உயரப் பறந்ததென்னவோ 💭🦋
நான் தான்
தாத்தா பாட்டி கதைகள் சொன்ன  இரவுகளில்...🌝🌜⭐
🌛

கதைகள் சொல்லும் தாத்தா பாட்டி கிடைத்த குழந்தைகள் எல்லோருமே பாக்கியசாலிகள், நானும் அந்த வரம் பெற்றவள் 😇

என் இரண்டு தாத்தாக்கள் தான் என் இனிய கதை சொல்லிகள். 
முதலில் என் அப்பாவின் அப்பா ,  அவர் retired headmaster... கதை சொல்லுங்க தாத்தா னு கேட்க வாயெடுக்கும் முன் தன்னுடைய பாட்டன் பூட்டனுடைய கதைகளை சொல்லுவார். அங்காளி பங்காளி அத்தனை பேரையும் அவர்களது ஊரையும் சொல்லி கொடுப்பார். 

எங்கே என்னுடைய தாத்தா பேரை சொல்லு பார்போம், என் ஒன்று விட்ட தம்பிகள் எத்தனை பேர், யார் யார் ? என் மூளைக்குள் கேள்விக்கணை தொடுப்பார்.  உறவு முறைகளை சொல்லிக்கொடுத்து வளர்த்ததாலோ என்னவோ பாசம் மனதோடு ஒட்டிகொண்டு போமாட்டேன் என்கிறது.

தனக்கு உதவி செய்தவர்களை, நண்பர்களை மறக்காமல் குறிப்பிடுவார். இப்படி வருடம் முழுக்க அவருடன் உற்சாகமாய் கழியும்...

பள்ளி விடுமுறையில் அடிக்கும் எனக்கு real jackpot ,  அம்மாவின் அழகான கிராமம் நேமம் ... தாத்தா பாட்டி இருவருமே சளைக்காமல் கதை சொல்வார்கள்... இரவில் மட்டுமில்லை ... சாப்பாடு ஊட்டும் போது , மதிய உணவிற்கு பின்  என பட்டியல் நீளும், கூடவே என் மகிழ்ச்சியும்.

உம்ம்  கொட்டிக்கொண்டே நான் தூங்கிய நாட்களும் உண்டு. என் தம்பி தங்கைகளுக்கோ புதிய புதிய கதைகள் வேண்டும்.
ஆனால் எனக்கென்னவோ கேட்ட கதைகளையே திரும்ப கேட்பதில் ஒரு சந்தோஷம். 

பழசு புதுசு கணக்கே கிடையாது கதைகள் விஷயத்தில். கதை சொல்லும் விதம் தான் முக்கியம். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா பாட்டி இழுக்கும் ராகத்திற்கேற்ப ம்ம்ம்ம் என்போம்.

சில வருடங்களில், நீ தான் வளர்ந்துட்டியே , புத்தகம்லாம் படிக்க கத்துகிட்டியே  ...இனி நீ தான் எங்களுக்கு கதை சொல்லனும் என்றனர். "சே ...ஏன்டா வளர்ந்தோம்"னு இருந்தது.

புத்தக வாசிப்பை பற்றி "தாத்தா வீட்டுத் திண்ணையில் எண்ணிலடங்கா புத்தகங்கள்" னு வேறு கதையில் சொல்கிறேன்.

என்னை பொறுத்தவரை குழந்தை வளர்ப்பில்  தாய்பால் போன்றது தாலாட்டு, சத்துணவு போன்றது கதைகள். 

சோற்று கவளத்துக்குள் காய் மறைத்துவைத்து கொடுப்பதுபோல் கதைகளுக்குள் ஒரு  நீதி (moral )

இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் முன்னோர்கள் (தாத்தா பாட்டி)
செய்த புண்ணியம் தான். 

கதைகள் மூலம் வாழ்வை புரியவைத்து , நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து , மகிழ்ச்சியாக வாழவும் சொல்லிக்கொடுத்த அம்மா அப்பா, பாட்டி தாத்தாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏





நேரம் ஆகஸ்ட் 12, 2021 2 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தாலாட்டு 🤰🤱👶😴😇

ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ (யார் இவரோ)
நீ ஆளப்பிறந்தவரோ
நீ அரசாளவந்தவரோ

நா பெத்தெடுத்த ரத்தினமே
ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

மாமன் அடித்தானோ
மல்லிப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூத் தண்டாலே
சித்தி அடித்தளோ
செண்பகப்பூச் செண்டாலே
பாட்டி அடித்தாரோ
பால் வார்க்கும் சங்காலே

ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

கண்ணாண கண்ணே நீ
கண்ணுறங்கு கண்ணனுக்கு
ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ

அம்மாவும்  பாட்டியும் எனக்கு பாட, இப்போது நான் என் குழந்தைகளுக்கு பாடுகிறேன்😍 தாலாட்டு கேட்கும் குழந்தைகள் சீக்கிரமாக பேசுகிறார்கள்.
என் மகள் மற்றும் மகனுக்கு முறையே 6 & 4 வயதாகிறது. வளர்ந்த குழந்தை கூட இந்த பாடல் கேட்கும் பொழுது தூங்கும் நேரம் என புரிந்து கொண்டு அமைதியாக படுக்க பழகிவிடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவும் பிள்ளை பினைப்பு தாலாட்டின் மூலம் இறுகுகிறது. இது என் இனிய அனுபவம்.










நேரம் ஆகஸ்ட் 12, 2021 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 18 ஜூலை, 2020

ஊரடங்கு என் குருவிப் பார்வையில் #LockdownTales


This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers; 
Share Your #LockdownTales 

ஊரடங்கில்தான் நம்மில் எத்தனை மாற்றங்கள்!

குழந்தைகள் ஏகலைவன் போல் "online classes" ல் அமர்ந்துவிட😅

சண்முகர் மயிலேரி உலகத்தை சுற்றியது போல் புல்லட்டு வண்டியில் சென்னையை சுற்றியவருக்கு இப்போது ஞானப்பழ கதையாக  "work from home "😎

எல்லோருக்கும் விதுரநீதி  பேச Twitter மற்றும் Youtube
 உக்கார்ந்த இடத்தில் சஞ்சயதிருஷ்டி  போல "LIVE NEWS" வேறு 😃

 ஆனால்,என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கோ இது திரிசங்கு 
சொர்கம். 😅

கண்ணன் திரௌபதிக்கு கொடுத்த சேலை போல துவைக்கவும் மடிக்கவும் துணி வந்து கொண்டே  இருக்க...  kitchen sink , அக்ஷய பாத்திரமாய் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. 😱

பத்தாகுறைக்கு" Social distancing"என்ற பெயரில் நமக்கு கூடமாட ஓத்தாசைக்கு இருந்த maid அக்காவும் வருவதில்லை...

இனி சோழ தேச வேளைக்கார படையோ பாண்டிநாட்டு ஆபத்துதவிகளோ வந்தால் தான் உண்டு.....😔
 
இந்த நிலையில் ,என்னுள்  Disney princess விழித்துக்கொண்டாள்

Princess: ஓருவேளை பாட்டி பொய் சொல்லி விட்டாளோ? 
இருக்காது. பாட்டி பொய் சொல்லவேமாட்டாள்.

இப்போதெல்லாம் ராஜகுமாரர்கள் பிறப்பதே இல்லையோ 😓
, நம்மை கொரோனாவிடமிருந்து காப்பாற்ற  இளவரசனுக்கு வழிதான் தெரியவில்லையோ
....
இல்லை பாவம்
இளவரசனுக்கு ஏறி வர குதிரை கிடைக்கவில்லை போலும்...😭😭😭

இப்போது தான் இந்த Disney princess, daddy's lil princess எல்லாம், வெளியே போடும் makeup போல காலத்தின் கோலம் , வெளி வேஷம .... ஆனால் உள்ளே....உள்ளே ஓடுவது உதிரமல்ல , பாரதியின் வரிகள்.  

பயந்ததும் அழுததும் போதும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டாள் ..
பாரதியின் வண்ணத்தை பூசிக்கொண்டாள்.புதுமைப் பெண்ணாய் மாறி நின்றாள். 

(வீரப்பெண்கள் ஒழிப்பாராம், சாத்திரங்கள் பல பல கற்பாராம் , சவுரியங்கள் பலபல செய்வாராம். )

Every girl is similar in having a Dad's little princess and a Bharathi's pudhumai pen within her. 

Every girl is unique,  because of their proportion of little princess+Pudhumai pen varies. 

It's simple 

சாதாரண இல்லத்தரசியாகவும் இளவரசியாகவும் இருக்கும்போது கனத்த இந்த ஊரடங்கும் , அதன் மன அழுத்தமும். பாரதியின் புதுமைப்பெண்ணான போது அமிழ்ந்துவிட்டது. அழிந்தேவிட்டது .

பாரதி போல அச்சமில்லை அச்சமில்லை பாடுவோம்.
அக்கினி குஞ்சின் முன் கொரோனா பிழைக்காது, ஊரடங்கும் கசக்காது. 

இதுவும் கடந்து போகும்.

 
நேரம் ஜூலை 18, 2020 13 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 5 ஜூன், 2020

பாரதீ🔥( HIGHLY INFECTIOUS)

கொரோனா மட்டும் இல்லை...
பாரதி(தீ) தொட்டால் தொடரும் , உள்ளத்தில் பற்றிக் கொள்ளும் தீ.

அவரோட அக்கினிகுஞ்சு வார்த்தைகள், ஒரேயொரு உள்ளத்து பொந்தில் வைத்தால் போதும், குழந்தைகள் , நண்பர்கள் என்று சுற்றிலும் வெந்து தணிந்து ஒளிரும் வல்லமை பெற்றது.

காதலை சொல்லணுமா?கோபத்தை கொட்டணுமா? குழந்தையை கொஞ்சணுமா? எல்லாவற்றுக்கும் நான் பாரதி வரிகளையே எடுத்துக்கொள்கிறேன். 

அடுத்த தலைமுறைக்கு  விதைத்தே ஆகணும் பாரதி(தீ)🔥. நான் விதைத்துவிட்டேன், என் மகளுக்கு...
 ”பாரதி பாடியிருக்காருல்ல காலை படிப்பு , மாலை விளையாட்டு ” என்று  சொல்லியே பழக்குகிறேன். 

அடுத்த அறைக்கு செல்ல பயந்து தயங்கினால், ”அச்சமில்லை அச்சமில்லை ” பாடு பயமே இருக்காது என்பேன். சேர்ந்து பாடுவோம் பயமின்றி அழகாக சென்று வருவாள்.

இரவில் தூங்க வைக்க ”சின்னஞ்சிறு கிளியே”...

கார் பயணத்திலும் , மொட்டை மாடிக்கு போகும்போதும் ”காக்கைச் சிறகினிலே”...நம் தாய் தமிழை நம் பிள்ளை சொல்ல கேட்க ... அதுவும் பாரதி வரிகளை🥰 ஆஹா 😍சொர்க்கம்.....

காற்று, தண்ணீர், உணவு, பாரதியின் வரிகள்.... இன்பமாய்
உயிர் வாழ இவை போதாதா?! 


 
நேரம் ஜூன் 05, 2020 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 25 ஏப்ரல், 2020

NO WORRIES

When I worried about ovulation , i missed it😣

When i worried about labour pain, ended up with Csection 😔

When i worried about hairfall , omg it increased😱

When i worried about kids , they became more sick and thin🙄

But when i stopped worrying 🤔 with happy Mind can do more focusing, everything turns normal.🤩

 I learned this way😅Hakuna Matata, no worries.💃💃💃

How you let it go?!

நேரம் ஏப்ரல் 25, 2020 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பின் பற்றாக்குறை

----------------

இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான்  அழறாங்க . 
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....

 Spread love & smile❤😃



நேரம் ஏப்ரல் 24, 2020 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

Rice Porridge( Kanji) recipe for babies & kids

1.Rice (puzhungal) 250g
2.Red rice /brown rice or matta rice 100
3.Broken wheat 100g
4.Pachapayaru or Siruparupu 50g
5.Udachakadalai 50g
6.Cashew 3
7.badam 3

Dry roast every above things separately n ground .... Seive and soft ground for 1year babies .. Coarse grind for toddlers.

Add enough milk or water n boil...  Make sure of no lumps...cook till you get that kanji texture.. . Add palmjagerry or salt for taste . Yummy kanji , sure kids will love... This is our moms recipe for us  n my kids 😍

Want more traditional healthy recipes? please comment... And please do share your recipes also. Thakyou friends.
நேரம் ஏப்ரல் 24, 2020 1 கருத்து:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: My cookbook

பழமொழி my fav

Kamalahassan  dialogue from a famous film பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது...

நான் ஆராய்ந்து அனுபவித்த பழமொழி
" கெடுவான் கேடு நினைப்பான்"

 Vinasakaale vibhareedha budhi , கெட்ட எண்ணம் கேடு கால புத்தி என்று விதவிதமாக எப்படி சொன்னாலும்,   சுய பரிசோதனைக்கும் ஒழுக்கத்துக்கும் உதவும் வேத வாக்கியமாகவே இதை பார்க்கலாம்.

பயத்தை உண்டுபண்ணியாவது , "யாருக்கும் தீங்கிழைத்துவிடாதே, மனத்தாலும் எண்ணிடாதே" என்று சொல்லும் விதம்... Wow😍


உங்களை கவர்ந்த பழமொழிகளை  commentsல் பகிரவும். நன்றி.
நேரம் ஏப்ரல் 24, 2020 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஒரு பானை சோறு



எனது மாமியாரை பற்றி யாரும் கேட்கும் பொழுது நான் சொலும் கதை... உண்மைக் கதை...

2015 ,  ஒரு காலை வேளை,  அடுக்களையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்... வெளியே ஏதோ சத்தம்... சண்டையா? யாருக்கு ?யாருடன்?  ஒரு curiosity உடன் நான் வெளியே ஓட  , வெளியே இருந்த என் மாமியார் வேகமாய் உள்ளே வந்தார்...

ஆர்வம் குறையாமல் என்னம்மா சத்தம் என்று கேட்க , " எதிர் வீட்டம்மாவை அவள் கணவன் திட்டுகிறார், நான்  இருப்பதை பார்த்தால் அவர்களுக்கு சங்கடமாகிவிடும் என்று உள்ளே வந்து விட்டேன் " என்றார்.

எனக்கு மண்டையில் குட்டியது போல் இருந்தது...

அவர் குணத்திற்கு இது ஒரு சான்று... தலைப்பை மறுபடி படிக்கவும். நன்றி.
நேரம் ஏப்ரல் 24, 2020 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...

  • ஊரடங்கு என் குருவிப் பார்வையில் #LockdownTales
    This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers;  Share Your #LockdownTales  ஊரடங...
  • இந்த சிப்பியின் முத்து
    22/5/2025 இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் ...
  • குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏
     குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

எனது படம்
PooraniShanmuganathan
வணக்கம் நண்பர்களே... இந்த Blogname என் சுருக்கமான description. நான் பூரணி.சென்னையில்பிறந்த, மாசறு மதுரையின் மருமகள். படிப்பு B.Tech (IT), ஆர்வமோ தமிழ் மற்றும் சித்த மருத்துவம். எழுதும் ஆசையில், கலர் பென்சில் கிடைத்த குழந்தையாய் தோன்றுவதை எல்லாம் கிறுக்க ஆரம்பிக்கிறேன். பதிவுகளிள் தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.Please share your thoughts in comments section here. நன்றி.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

முறைகேடு எனப் புகாரளி

லேபிள்கள்

  • My cookbook

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (3)
    • ▼  டிசம்பர் (1)
      • குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏
    • ►  மே (2)
  • ►  2024 (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2021 (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
  • ►  2020 (7)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (5)
எத்ரியல் தீம். Blogger இயக்குவது.